கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு களவிஜயம்..! - Sri Lanka Muslim

கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு களவிஜயம்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் சுகாதார குழுவின் தலைவியும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.ஆர். பஸீறா றியாஸ் தலைமையில் பெரிய நீலாவணை பகுதியில் அமையப்பெற்றுள்ள மாநகர சபைக்கு சொந்தமான சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்துக்கு கள விஜயம் ஒன்றினை நேற்று மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்தின் சமகால நிலையை அறிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் வினைத்திறனாக இயங்கச்செய்யும் இயலுமைகளையும் ஆராயவே இந்த விஜயம் இடம்பெற்றது என அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதாரக்குழு உறுப்பினர்களான மாநகர சபை உறுப்பினர் நடராசா நந்தினி, மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி என்.எம். அஸாம் மற்றும் பீ.எம்.ஷிபான் ஆகியோர் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team