கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நிசாம் பதவிப் பிரமாணம் (புகைப்படம் இணைப்பு) - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நிசாம் பதவிப் பிரமாணம் (புகைப்படம் இணைப்பு)

Contributors

அஸ்லம் எஸ்.மௌலானா- கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இன்று

திங்கட்கிழமை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை முன்னிட்டு கல்முனை மாநகரில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வருகை தந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அங்கு சுன்னத்தான தொழுகையில் ஈடுபட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு தனது முதல்வர் பயணத்தை ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட துஆப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.

அதன் பின்னர் அங்கிருந்து அக்கரைப்பற்று- கல்முனை நெடுஞ்சாலை ஊடாக மாநகர சபை அலுவலகம் வரை மக்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து  மாநகர சபை வளாகத்தில் முதல்வரை வரவேற்கும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் அப்துல் மஜீத் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மதப் பெரியார்கள், வர்த்தகர்கள், பல்லின சமூக பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.lm

19s10

 

19s11

 

19s13

Web Design by Srilanka Muslims Web Team