கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற மறைந்த அஷ்ரபின் நினைவேந்தல் !! - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற மறைந்த அஷ்ரபின் நினைவேந்தல் !!

Contributors

(நூருள் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், பாரூக் சிஹான்)

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் தலைமையில் முதல்வர் அலுவலகத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரலாறு, கட்சி ஸ்தாபகர் அஷ்ரப் அரசியலில் முன்னெடுத்த சாதனைகள், இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் அரசியலின் போக்குகள் தொடர்பில் உணர்வு பூர்வமாக உரையாற்றினார். இதனை தொடர்ந்து கலந்து கொண்ட உலமாக்கள் மறைந்த அஷ்ரபின் நல்லமல்களை முன்வைத்து துஆ பிராத்தனை செய்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். நிஸார், வீ.எம். சிபான், சட்டத்தரணி என்.எம். அஸாம், எம்.எஸ்.எஸ். உமரலி, ஏ.ஆர்.எம். அமீர், சபை செயலாளர் எம்.ஐ.எம். ஆரிப் உட்பட உலமாக்கள், முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team