கல்முனை மாநகர சபையில் தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு! - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபையில் தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு!

Contributors
author image

Aslam S.Moulana

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 14 ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் அவரை நினைவு கூர்ந்து பிர்ரர்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இந்நிகழ்வு இடம்பெற்றது.

 

இதன்போது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பற்றி முதல்வர் விசேட உரை நிகழ்த்தியதுடன் இரண்டு நிமிட பிரார்த்தனையும் இடம்பெற்றது.

 

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எம்.எச்.நபார் ஆகியோர்  மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பற்றிய நினைவுரைகளை நிகழ்த்தினர்.

 

02

 

03

 

04

 

05

Web Design by Srilanka Muslims Web Team