கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு 5 வீத வாழ்க்கைப்படி - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு 5 வீத வாழ்க்கைப்படி

Contributors

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு மாநகர சபை ஊழியர்களுக்கு 5 வீத வாழ்க்கைப்படி வழங்குவதற்கு சபையின் நிதிக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாநகர முதல்வர் சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர் தலைமையில் நேற்று (08) புதன்கிழமை மாலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாநகர சபையின் நிதிக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுகாதார வேலைத் தொழிலாளர்கள் உட்பட தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வாழ்க்கைப் படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

அத்துடன் கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற தமிழ் ஊழியர்களுக்கு தைப்பொங்கல் விழா முற்பணம் வழங்குவதற்கும் நிதிக்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என மேலும் அறிவிக்கப்படுகிறது.(ad)

Web Design by Srilanka Muslims Web Team