கல்முனை மாநகர முதல்வர் இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் - Sri Lanka Muslim

கல்முனை மாநகர முதல்வர் இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

Contributors

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை மாநகர முதல்வர்- நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று

நேற்று 29 வெள்ளிக்கிழமை மாலை இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட கல்முனை நூலக அபிவிருத்தி, சுமார் 250 மில்லியன் பெறுமதியான திண்மக்கழிவு அகற்றல் முகமைத்துவ வேலைத் திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

இதன்போது இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரினால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதேவேளை இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவகத்தின் ஊடாக (KILA) கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு இந்திய துணை உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான  ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ், மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஏ.பஷீர், எம்.எல்.சாலிதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஏ.அமிர்தலிங்கம், ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் ஏ.எம். ரியாஸ், ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் சர்வதேச தொடர்பாடல் அதிகாரி  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

kalmunai2

 

kalmunai3

 

 

Web Design by Srilanka Muslims Web Team