கல்முனை முதல்வராக பதவியேற்ற நிஸாம் காரியப்பரின் முதலாவது சபை அமர்வு (வீடியோ) - Sri Lanka Muslim

கல்முனை முதல்வராக பதவியேற்ற நிஸாம் காரியப்பரின் முதலாவது சபை அமர்வு (வீடியோ)

Contributors

( எஸ்.எம்.எம்.றம்ஸான் ,எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் கல்முனை மாநகரசபையின் முதலாவது அமர்வு திங்கட் கிழமை மாலை சபா மண்டபத்தில் புதிய மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

சபைக்கு வருகை தந்த புதிய முதல்வர் மாநகரசபை உறுப்பினர்களால் கரகோசம் செய்து வரவேற்கப்பட்டார். புதிய முதல்வருக்கு மாநகரசபை உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த அமர்வின் போது
பிரதி மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நபார் தவிர்ந்த ஏனைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளித்திருந்தனர்.

கல்முனை மாநகர முதல்வர் குழுநிலை கலந்துரையாடலின் போது தனது ஆசனத்திலிருந்து இறங்கி வந்து கௌரவ உறுப்பினர்களுடன் அமர்ந்து கொண்டார்.

முதலில் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு விடுவது சம்பந்தமாக நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு பெறப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team