கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார் - Sri Lanka Muslim

கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார்

Contributors

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை கௌரவிக்கும் நிகழ்வும் பதவியேற்பு வைபவமும் எதிர் வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9 .00மணியளவில் கல்முனை முகைதீன் ஜும்ஆப்பள்ளியிலிருந்து நிகழ்வுகள் ஆரம்பமாகும்.அதன்பின்னர் பேரணியாகச்சென்று கல்முனை மா நகர சபையில் வைத்து மேயர் தனது கடமைகளைபபொறுப்பேற்றுக்கொள்வார். இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கல்முனைப்பிரதேசத்திலுள்ள சமூக சேவை அமைப்புக்கள்,விளையாட்டுக்கழகங்கள்.வர்த்தக சங்கங்கள் பள்ளிவாயில்கள் நிருவாகிகள் மற்றும் பாடசாலைச்சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team