கல்முனை மேயர் இராஜினாமா செய்ய மறுப்பு! ஹக்கீமுடன் முரண்பாடு - Sri Lanka Muslim

கல்முனை மேயர் இராஜினாமா செய்ய மறுப்பு! ஹக்கீமுடன் முரண்பாடு

Contributors

கல்முனை மாநகர சபை மேயர் பொறுப்பிலிருந்து இன்று 30 ஆம் திகதிக்குள் இராஜினாமாச் செய்யும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்திருந்த வேண்டுகோளை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் நிராகரித்துள்ளார்.

நேற்றிரவு அவர் தனது ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தியதனையடுத்தே இந்த முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் மேயருக்குமிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதியமைச்சர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு இன்னும் தீர்வு வழங்காத நிலையில் சிராஸின் பிரச்சினை இன்னும் கட்சிக்குள் அதிக பிரிவினையை உருவாக்கும் என  சிலர் ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team