கல்முனை மேயர் பதவியை விட்டுத்தர முடியாது -சிராஸ் » Sri Lanka Muslim

கல்முனை மேயர் பதவியை விட்டுத்தர முடியாது -சிராஸ்

siras

Contributors

அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைவர் ஹக்கீம் பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தானே அடுத்த இரு வருடங்களுக்கும் மேயராக பதவி வகிக்க விரும்புவதாகவும் அதனையே சாய்ந்தமருது மக்கள் விரும்புவதாகவும் மேயர் சிராஸ் தலைவர் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

“இல்லை அது முடியாது, உங்களுக்கு பதவி தரப்படும் போது இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் நீங்கள் ராஜினாமா செய்தேயாக வேண்டும்- சுழற்சி முறை இணக்கப்பாட்டை மீற முடியாது- கட்சி, மற்ற தரப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது” என தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார்.  சரி, நான் எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி விட்டு எனது முடிவை சொல்கிறேன் என மேயர் சிராஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

எது எப்படியாயினும் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தலைவர் ஹக்கீம் இதன்போது உறுதியாகத் தெரிவித்தார் என்று கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Web Design by The Design Lanka