கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் ? » Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் ?

Contributors

-(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.ரம்ஸான்)

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்முனை வலய கல்வி பணிமனையின் திட்டமிடலுக்கு பொறுப்பான  பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரே கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று விஜயம் குறித்த குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் பதில் அதிபரின் அனுமதியின்றி வகுப்புக்களுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது 10ஆம் ஆண்டிலுள்ள வகுப்பறைக்கு சென்று பாடத்திட்ட புத்தகத்தில் கீறல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

இந்த செயற்பாடு குறித்து ஆசிரியர்கள் குறித்த பிரதி கல்வி பணிப்பாளரிடம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளன பிரதி அதிபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதி அதிபர் மீதான தாக்குதலை அடுத்து மாணவர்கள் பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனத்தை சேதப்படுத்தியதுடன் அவர் தங்கியுள்ள அதிபர் காரியாலயத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். தற்போது கல்முனை வலய கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் அங்கு விஜயம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

Web Design by The Design Lanka