கல்முனை ஸாஹிராவில் மாணவர் அனுமதி விவகாரம்: கல்முனை பொலிசில் முறைப்பாடு!? » Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிராவில் மாணவர் அனுமதி விவகாரம்: கல்முனை பொலிசில் முறைப்பாடு!?

Complain Copy

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(மொஹமட் அக்மல் அஹமத்)


கடந்த மாதம் இறக்காமத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் ஸினாஸை தரம் 10இற்கு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் அனுமதிப்பதற்காக அந்த கல்லூரியின் பிரதி அதிபரை சந்தித்து அனுமதி கோரியுள்ளார்.

குறித்த தாயின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதி அதிபர் தற்போது முதலாம் தவணை பரிட்சை இடம்பெற்றுகொண்டிருப்பதால் பரிட்சை முடிந்ததும் மாணவன் ஸினாஸின் அனுமதிக்காக 15,000ரூபா பணத்துடன் இறக்காமத்தில் தான் கற்ற பாடசாலையில் இருந்து விடுகை பத்திரத்துடன் தன்னை சந்திக்குமாறு கோரியுள்ளார்.

குறித்த தாய் நேற்று 23.4.2018 பாடசாலைக்கு வந்து அதிபர் அவர்களை சந்தித்து இவ் அனுமதியை கோரியபோதே இந்த விடயம் அம்பலமாகி கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

பாடசாலையில் காணப்படும் இட நெருக்கடி கல்வியாண்டின் இடைநடுவில் இவ் அனுமதியை தர முடியாது என அதிபர் மறுத்தபோது தனது பிள்ளைக்கு கல்வி கற்கும் அனுமதி மறுத்தால் தான் இந்த இடத்திலே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும்  இறக்காம பாடசாலையில் இருந்து தனது மகனை விலக்கி விடுகை பத்திரத்துடன் வந்துள்ளதாகவும் மீண்டும் அந்த பாடசாலைக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த தாய் இடியப்பம் சுட்டு விற்று சுயதொழில் செய்து கொண்டே பிள்ளைகளை பராமரிப்பதாகவும் இப்போது கடன் பெற்றே இந்த பணத்தை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கல்முனை பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் குறித்த தாய் எஸ் தாஜூனிசாவினால் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கல்முனை பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Complain Copy Letter Lettera

Web Design by The Design Lanka