கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு ஹரிஸ் விஜயம் - Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு ஹரிஸ் விஜயம்

Contributors

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் திங்கட்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் . கடந்த சில  நாட்களாக  கல்லூரியில் இடம்பெற்ற அசாதாரண  நிலை தொடர்பில் ஆராய்வதற்காகவே கல்லூரிக்கு திடீர்  விஜயம் மேற்கொண்டிருந்த தாக அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

இதன்போது பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்களை  சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, பாடசாலையில் நேற்று இரவு  இடம்பெற்ற  பழைய மாணவர்கள்,  பெற்றோர்கள்,பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டத்தில்  ஏகமனதாக எடுக்கப்பட்டட ஏழு அம்சக் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினரிடம் பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா ஒப்படைத்தார்.

இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் பேசப்படுகின்ற இப்பாடசாலையை  இழி நிலைக்கு கொண்டு செல்ல எவரும் அனுமதிக்க முடியாது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு  எதிராக நடவடிக்கை  என ஹரீஸ் எம்.பீ அங்கு கூறினார்.

எடுக்கப்பட்ட அந்த எழு அம்சக் கோரிக்கையில்  பிரதிக்கல்விப்பணிப்பாளர் உட்பட அவரது இரு சகோதரர்களும் இடமாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team