கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் சவ்பாத் சாதனை » Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் சவ்பாத் சாதனை

Imo 3-20171022-WA0131-1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சாய்ந்தமருது ஜீ. எம்.எம்.எஸ் வீதியை சேர்ந்த மற்றும் அர்ப்பணிப்புமிக்க வியாபாரியான அப்துல் மஜீத் அவர்களின் மகனும், 3 பேருக்கு சகோதரரருமான முஹம்மட் சவ்பாத் கழிவுகளை (பிளாஸ்டிக்,கண்ணாடி,உணவு,கடதாசி) பிரிக்கும் குறைந்த செலவில் உருவாக்கி சாதனை

தற்காலத்தில் இலங்கையில் பாரிய பிரிச்சினையாக உள்ளவற்றுல் கழிவுகளை வேறாக்கி அகற்றும் பிரச்சினை உள்ளது. அந்த வகையில் இவர் உருவாக்கிய இந்த உபகரணத்தின் மூலம் பல வகையான கழிவுப் பொருட்களை இவ் உபகரணத்தில் இடுவதால் – இடப்பட்ட கழிவுகளை பிளாஸ்டிக், கண்ணாடி, உணவு, கடதாசி என தன்னிச்சையாக பிரித்து உபகரணத்தில் அடங்கி உள்ள பெட்டியினுல் அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாது கழிவுகள் கூடையில் நிரம்பியுள்ளதை தகவல் தரவும் மற்றும் நகர புறங்களில் கழிவுகள் நிறைந்து காணப்படும் இடங்களை விரைவில் தன்னிச்சையாக குப்பை கழிவு அகற்றும் சேவை நிலையத்திற்கு தகவல் அனுப்பும் வகையிலும் எதிர்காலத்தில் இவ் இயந்திரத்தை எல்லா மக்களும் இலகுவாக கொள்வனவு செய்யவும் பயன்படுத்தவும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அன்றாட வாழ்க்கையோடு ஒப்பிட்டால் இவ் உபகரணம் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது

1. வைத்தியசாலையை எடுத்துக் கொண்டால் பல நோயாளர்கள் கழிவுகளை தனி தனியாக பிரித்து கூடையில் இடுவதற்கு பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர் அதை குறைக்கிறது

2. குப்பைகளை மேடாக்கி அதை தனி தனியே பிரித்து எடுப்பதற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் இந்த நிலைமையை குறைத்து குறைந்த நேரத்தில் கழிவுகளை வேறாக்கி கொள்ளலாம்

3. இவ் உபகரணத்தை இயக்க குறைந்த மின்சக்தியே தேவைப்படும் அம் மின்சக்தியை சூரிய கலம் மூலம் பெறலாம்

4. எல்லா மக்களும் இலகுவாக கொள்வனவு செய்யவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது _ என பல்வேறு நன்மைகளை கூறிக்கொண்டே போகலாம்.

குறைந்த மின்சக்தியில் இயங்கும் மா அரிக்கும் இயந்திரத்தை
அடுத்து, சர்வதேச கவனத்தை ஈர்த்த கண்டுபிடிப்பாக இவர் உருவாக்கியது “சூரிய சக்தியில் இயங்கும் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்” மற்றும் கறுபா உரிக்க பயன்படுத்தும் இயந்திரம் என இவரது கண்டுபிடிப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்

தனது பாடசாலை காலத்தில் தேசிய ரீதியாக பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற “Innova minds – 2017” ரூபவாஹினி இனைந்து நடாத்திய போட்டியில் 21 பேர் தெரிவாகினர். இதில் final இற்கு தெரிவான 7 பேரிலும் தெரிவு செய்யப்பட்டு இந்தோனேசியாவில் 1500 உலக கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற சர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் தங்க பதக்கம் பெற்று வந்து இலங்கைக்கு பெருமை சேர்த்ததை எமது நாடு மறக்காது

உள்நாட்டில் இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களை பட்டியலிட்டால், இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழு, சாய்ந்தமருது விதாதா வள நிலையம், கொழும்பு ஆனந்தா, ரோயல் கல்லூரியின் தேசிய மட்ட புத்தாக்கப் போட்டி, இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் தேசிய மட்ட போட்டி, இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் (IESL) போட்டி , இலங்கை பல்கலைக்கழகத்தினால் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டி என பல போட்டிகள் இவரை கௌரவப்படுத்தி இருக்கின்றன, பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி இருக்கின்றன.

ஒரு இளம் கண்டுபிடிப்பாளருக்கு முதலில் குடும்பமும், சிறுவயது முயற்சிகளும் , தேடல்களுமே தனது அடைவை வெளிக்காட்ட உறுதுணையாக இருப்பதை சவ்பாத்தின் கதையும் அதையே பிரதிபலிக்கின்றது. இயந்திரமாக இதுவரை இல்லாத வகையில் பல்வேறு தொழினுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளதோடு. இதன் முழு வேலைகளும் முடிந்ததும் மற்றும் உபகரண உரிமையாளர் பதிவு சட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் அதன் Original Register பத்திரம் கிடைத்தால் மாத்திரமே சந்தைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்

செல்வன் ஏ.எம்.எம். சவ்பாத் மூன்று பாடசாலைகளுக்குச் சொந்தக்காரர்.ஆரம்ப கல்வி தொடக்கம் தரம்-5 வரை சாய்ந்தமருது GMMS பாடசாலை உம் , பின்னர் 3 வருடங்கள் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயமும், இறுதியாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியும், இவரை செதுக்கிய பாடசாலை வரிசைகள்.

அனைத்திற்கும் வழிகாட்டிய வல்ல இறைவனுக்கும் முதலில் நன்றி சொல்லி அடுத்து தனது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், உறவினர்கள் மற்றும் அவரது பாடசாலை காலத்தில் ஊக்கமூட்டிய பாடசாலை பொறுப்பாசிரியர் ஏ. ஆதம்பாவா, அதிபர்கள் , ஆசிரியர்கள், நண்பர்கள் அவர்களுக்கும் நன்றி கூறுகிறார் சவ்பாத்.

( தகவல் : Ampara District Young inventors Organisation – Leader- Mohamed Aroos)

Imo 3-20171022-WA0131-1

Web Design by The Design Lanka