கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நிதி மோசடியா..? - Sri Lanka Muslim

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நிதி மோசடியா..?

Contributors

(வெளிச்சம்)

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ. கபூர் ஆகியோர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஊடகங்களுக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் தருகையில் கல்லூரியில் நிதி மோசடி நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார் அல்லவா..?

இந்த நிதி மோசடியில் இக் கல்லூரி ஆசிரியர்களின் பெயர்களில் காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் அது சம்மந்தமாகவும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்  அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தாரின் குற்றச்சாட்டை கல்லூரி பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா முற்றாக மறுத்து இருந்தார்.

முக்தார் பதட்டத்தோடும் இரத்தக் கறையோடும் இருந்ததினாலும் எமது கல்லூரியின் மீது கொண்டிருந்த குரோதத்தினாலும் இக் கல்லூரியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று அவர்  கூறினார் எனவும் அதிபர் தெரிவித்திருந்தார்.

ஆனால், பிரதிக் கல்விப்பணிப்பாளர் முக்தார் தனது குற்றச் சாட்டுக்கு ஆதாரமாக அது சம்மந்தப்பட்ட சகல விபரங்களையும் காசோலை இலக்கம், எழுதப்பட்ட தொகை. திகதி, எதற்காக பணம் பெறப்பட்டது என்பனவற்றை புகைப்பட பிரதியாக ஜப்னா முஸ்லிமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விபரங்கள்,

எம்.ஐ.எம்.ஜவாஹர் இப்றாஹிம் ( உதவி அதிபர் ) காசோலை இலக்கம், 193233 2013.02.08 ஆம் திகதி ரூபா 35000/=  தரம் 08 மாணவர்களின் வகுப்புகளின்  திருத்த வேலைகளுக்காக

1. ……………………..  ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193232 2013.02.08 ஆம் திகதி ரூபா 15000/=  மை பூசுவதற்கான முற்பணம்.

2. ……………………… ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193248  2013.05.06 ஆம் திகதி ரூபா 24500/= சுற்றாடலை அழகுபடுத்தல்.

3……………….( ஆசிரியர் )  காசோலை இலக்கம் 193249  2013.05.07 ஆம் திகதி 20000/= வகுப்பறைகளில் மின் இணைப்புகளைத் திருத்துதல்.

4…………………… ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 133241 2013.04.09 ஆம் திகதி ரூபா 30000/= தரம் 6, 7 வகுப்புக்களின் திருத்த வேலைக்கு பகுதிக் கொடுப்பனவு.

5……………………..  ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193240  2013.04.08 ஆம் திகதி ரூபா 48770/=  கதிரை, மேசை செய்த வகையில் பெற்றுக் கொண்டது.

6……………..  ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193235  2013.03.15 ஆம் திகதி ரூபா 25000/= Garden Pipe Line.

7……………………..  ( ஆசிரியர் ) காசோலை இலக்கம் 193234   2013.02.20 ஆம் திகதி ரூபா 35000/= கதிரை, மேசைகளுக்கு பலகை கொள்வனவு.

முக்கிய குறிப்பு கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பிவைத்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரங்களை எமது இணையம் நீக்கியுள்ளது. இருந்தபோதும் காசோலை விபரங்களை மாத்திரம் பதிவேற்றுகிறோம்.

அத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையம் இந்த செய்தியை பதிவேற்றம் செய்தது 05-11-2013 அன்று அதிகாலை வேளையாகும். இந்நேரத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பிரதி அதிபரையோ அல்லது குற்றம்சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர்களையோ தொடர்புகொள்ள முடியவில்லை. இருந்தபோதும் அவர்கள் விளக்கம் வழங்குமிடத்து அதனையும் பதிவேற்றம் செய்ய எமது இணையம் காத்திருக்கிறது.jm

Web Design by Srilanka Muslims Web Team