கல்விக் கோட்டை ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர்கள் சந்திப்பு » Sri Lanka Muslim

கல்விக் கோட்டை ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர்கள் சந்திப்பு

j366

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

கலைக் கோட்டை, கல்விக் கோட்டை ஜமால் முஹம்மது கல்லூரியை உருவாக்கிய ஜமால் முஹம்மது, காஜா மியான் இவர்களின் நட்பை, உறவை நாங்கள் பின் தொடர்கிறோம் குவைத், துபாய், அபுதாபி நாடுகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன் பேச்சு

திருச்சி ஜன –06
தென்னகத்தின் அலிகார் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மாநகரில், அமைந்துள்ள கலைக் கோட்டை, கல்வி கோட்டை ஜமால் முஹம்மது கல்லூரியை உருவாக்கிய இருவர் உருவாக்கிய நட்பை நாங்களும் தொடர்ந்து பின்பற்று வருகிறோம் என்று துபாய் மற்றும் அரபு எமிரேட்ஸில் உள்ள குவைத் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சந்திப்பு கூட்டத்தில் கல்லூரி செயலாளர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன் பேசினார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சென்னை, திருச்சி, மற்றும் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, துபாய், ஜித்தா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முன்னாள் மாணவர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜமால் முஹம்மது கல்லூரியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக முன்னாள் மாணவர்களால் இந்நாள் மாணவர்களுக்கு கல்லூரியில் பயிலும் இளங்கலை, முதுகலை படிக்கும் ஏழை, எளிய மாணவ மாணவியரைச் சேர்ந்த 1000 பேருக்கு தோராயமாக 60இலட்சம் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு விடுதி கட்டணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அரபு எமிரேட்ஸ்க்கு உட்பட்ட துபாய், அபுதாபி ஆகிய நாடுகளிலும் குவைத்திலும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன் தலைமையில் உதவிச் செயலாளர் ஹாஜி ஜமால் முஹம்மது, கல்லூரி முதல்வர் முனைவர் முஹம்மது சாலிகு, கூடுதல் துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளருமான இஸ்மாயில் முகைதீன், மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் அப்துல் ஸமது, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் அப்துல் காதர் நிஹால், விடுதி இயக்குநர்கள் முனைவர் முஹம்மது பாசில், பேராசிரியர் ஜமால் முஹம்மது யாசீன் சுபைர், பேராசிரியர் ராஜா முஹம்மது, ஆகியோர் சென்றனர்.

முதல் நாளில் துபாய் சென்ற அவர்களுக்கு அங்குள்ள முன்னாள் மாணவர்கள் விமான நிலையத்தில் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் துபாயில் உள்ள அல்ஷேக் ரஷீது கலையரங்கத்தில் விஜய் டி.வி சிரிப்புடா புகழ் ஈரோடு மகேஷ் தலைமையில் அசத்தல் அரங்கம் நடைபெற்றது. இதில் துபாயில் உள்ள தமிழர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன் பேசுகையில் : இந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன். இந்த கல்லூரி 1951ம் ஆண்டு ஜமால் முஹம்மது மற்றும் காஜாமியான் ராவுத்தர் ஆகியோரால் எந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்டதோ அதே நோக்கத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், இவர்கள் ஆற்றிய பணிகள் குறைவராமல் இன்று வரை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். தென்னகத்தின் அலிகார் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மாநகரில், அமைந்துள்ள கலைக் கோட்டை, கல்வி கோட்டை ஜமால் முஹம்மது கல்லூரியை உருவாக்கிய இருவர் உருவாக்கிய நட்பை உளவை நாங்களும் தொடர்ந்து பின்பற்று வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

உதவிச் செயலாளர் ஹாஜி ஜமால் முஹம்மது பேசுகையில் : அடிமை இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்ற காந்தியின் கனவை நினைவாக்க, நிரப்பப்படாத காசோலை கொடுத்தவர் எங்கள் பாட்டனார். அதாவது ஜமால் முஹம்மது சாஹிப் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கதராடை அணிய கதர் ஆலையை நிறுவியவர் இவருடைய பாட்டனார் அதாவது காஜாமியான் ராவுத்தர். காந்தியின் கனவும் நனவாகிவிட்டன. நாட்டுச் சுதந்திரத்தில், கல்லூரி நிறுவியதிலும் இன்று பல்கி, பெருகி விரிந்து நிற்கும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் எங்கள் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இந்த வருடம் விஷுவல் கம்யூனிகேசன் துறை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல, அனைத்து துறைகளும் ஆரய்ச்சித் துறையாக மாறி விட்டது. ஆகையால் முன்னாள் மாணவர்கள் நீங்கள் இந்தியா வரும் போது, உங்களது கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துமாறும் அவர்களுக்கு, நீங்கள் ஏதேனும் வேலை வாய்ப்பு சம்பந்தமான அறிவுறைகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் முஹம்மது சாலிகு பேசுகையில் நமது கல்லூரியில் அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் நீங்கள் கொடுக்கிற கல்வி உதவித் தொகை கொண்டு பயின்று வருகிறார்கள். நமது கல்லூரி 21 இளநிலை, மற்றும் 21முதுநிலை துறைகள் இருக்கிறது. அதே போன்று, எல்லாத் துறைகளும் ஆராய்ச்சித் துறையாக மாறி வருகிறது. இன்றைக்கு கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கும் திறந்து இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வந்து மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை தாருங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி கூடுதல் துணை முதல்வரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளருமான முனைவர் இஸ்மாயில் முகைதீன் பேசுகையில் : நமது கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். கல்லூரி எங்களுக்கு கல்வியை, மனித மாண்புகளை கற்று தந்து அப்பொழுது கல்லூரியின் நாங்கள் முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் பெருமை அடைந்தோம். முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் உலகமெங்கிலும் நல்ல இருப்பதை அறிந்து கல்லூரி பெருமை அடைகிறது. மேலும், தாயகத்திற்கு வரும் பொழுது நமது கல்லூரி வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறேன். அது மட்டுமில்லாமல் இந்நாள் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் 20வது ஆண்டு சந்திப்பு கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. ஹாஜி எம்.எம் ஜியாவுதீன் தலைமை வகித்து பேசினார். முன்னாள் மாணவர் முஹம்மது இஸ்ஹாக் அனைவரையும் வரவேற்று பேசினார். ஹாஜி எம்.எம் ஜியாவுதீன் தனது தலைமை உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கு விரைவில் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு கட்டிடம் கட்டி தருவதாக உறுதி கூறினார். விழாவில் இ.டி.ஐ குரூப் நிறுவனத்தின் இயக்குநர் அன்வர் பாட்ஷா, மற்றும் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி செயலாளர் ஹபிபுல்லா, கல்லூரி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் முஹம்மது பயாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முஹம்மது ரஹ்மத்துல்லா, ஜமால் முஹம்மது ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் மற்றும் மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

துபாயில் உள்ள ஈமான் சங்கத்தின் சார்பில் ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இதில், ஈமான் சங்க நிர்வாகிகள் காதர் மொய்தீன், கல்விக் குழு செயலாளர் பைஜுர் ரஹ்மான், மீடியா செயலாளர் முதுவை இதயத்துல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அபுதாபியில் அய்மான் சங்கத்தின் தலைவர் ஹாஜி சம்சுதீன் தலைமையில் ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகிகள் மற்றும் முதல்வர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டமும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் எஸ். ஹமீது, திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யா மொழி, மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதில் முன்னாள் மாணவர்கள் கல்லூரி மற்றும் நினைவுகளை இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்கள். பின்னர், திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவர் பேசுகையில் : நானும் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று நல்ல நிலமைக்கு வர காரணம் அதே போன்று அய்மான் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் இதே கல்லூரியில் பயின்றவர்கள் தான், எந்த நோக்கத்தோடு ஜமால் முஹம்மது கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதோ அதே போன்று தான் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியும், இரண்டுமே ஒரே கல்லூரி தான் இதில் எந்த வித மாற்றம் கிடையாது. எல்லாம் நோக்கமும் ஒன்று தான் இவ்வாறு அவர் பேசினார். துபாயில் உள்ள அமிட்டி பல்கலைக் கழகத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் சென்று ஆய்வு செய்தார்கள்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் குவைத் பிரிவின் 19வது ஆண்டு சங்கத்தின் சந்திப்பு கூட்டம் தஸ்மா ஆசிரியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அகட விகடம் புகழ் வாணியம்பாடி முனைவர் அப்துல் காதர், மூத்த அறிவியல் ஆராய்ச்சியாளர் நீலமணி, செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முதீன் தலைமையில் உதவிச் செயலாளர் ஹாஜி ஜமால் முஹம்மது, ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் முனைவர் முஹம்மது சாலிகு, கூடுதல் துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் இஸ்மாயில் முகைதீன், மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் அப்துல் ஸமது சுயநிதிப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் அப்துல் காதர் நிஹால், விடுதி இயக்குநர்கள் முனைவர் முஹம்மது பாசில், பேராசிரியர் ஜமால் முஹம்மது யாசீன் சுபைர், பேராசிரியர் ராஜா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக முன்னாள் மாணவர் முத்துக் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சங்கத்தின் தலைவர் அமீர் ஆண்டு அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் முஹம்மது இக்பால், துணைத் தலைவர் முனீர், மீடியா செயலாளர் இத்ரீஸ், அஸ்மத் பாட்ஷா, முஹம்மது இலியாஸ், சையது உவைஸ், ஜமால் மைதீன், மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், குவைத்தில் உள்ள இன்போ டாட் காம் இணையத் தளம் ஜமால் முஹம்மது கல்லூரி பற்றிய தகவல் மையத்தையும் திறந்து வைக்கப் பட்டது. இந்த இணைய தளத்தில் கல்லூரி பற்றிய அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். குவைத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளை முன்னிட்டு மீலாது நபி விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் முனீர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வாணியம்பாடி அகட விகடம் புகழ் முனைவர் அப்துல் காதர் மற்றும் கல்லூரியின் செயலாளர் மற்றும் முதல்வர் மற்றும் இயக்குநர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் துபாய் மற்றும் அரபு எமிரேட்ஸ் உட்பட்ட அபுதாபி குவைத் உள்ளிட்ட அமைப்பில் உள்ள மாணவர்கள் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்த மாணவர்களுக்கு அதிக அளவில் கல்வி உதவித் தொகை கொடுப்பதாகவும், உறுதி அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

j j-jpg2

Web Design by The Design Lanka