கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும்... படங்கள் - Sri Lanka Muslim

கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும்… படங்கள்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும்  நிகழ்வும் 11-08-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி -5 அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 

காத்தான்குடி-5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால அதிபர் ஏ.எல்.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள்,மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி),கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,

 

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகமும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி பதுறுத்தீன், காத்தான்குடி -5 அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஹகீம்,பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

இங்கு காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை அதிதிகளினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

 

20

 

21

 

22

 

23

 

24

 

25

 

26

Web Design by Srilanka Muslims Web Team