களுகங்கையில் உப்பு நீர் கலப்பதை தடுக்க திட்டம் ; அமைச்சர் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு » Sri Lanka Muslim

களுகங்கையில் உப்பு நீர் கலப்பதை தடுக்க திட்டம் ; அமைச்சர் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு

ha.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (14) குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமான அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் களுகங்கையில் உப்புநீர் கலப்பது தடைசெய்யப்பட்டால் களுத்துறை, பேருவளை மற்றும் பயாகல பிரதேசங்களிலுள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவுள்ளது. குறித்த பிரதேசங்களில் வழங்கப்படும் குடிநீரில் உவர்நீர் கலப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் ஹக்கீம் மேற்படி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ha ha.jpg2

Web Design by The Design Lanka