கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் மற்றும் தொட்டிகள் வழங்கும் வைபவமும் » Sri Lanka Muslim

கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் மற்றும் தொட்டிகள் வழங்கும் வைபவமும்

IMG-20180109-WA0016-1

Contributors
author image

Hasfar A Haleem

கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வுகளும் தொட்டிகள் வழங்கும் வைபவமும் செவ்வாய்க் கிழமை (09) கிண்ணியா நகர சபையினால் அதன் செயலாளர் என்.எம்.நௌபீஸினால் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில்  திண்மக் கழிவு தொடர்பான முன்மொழிவாக உக்கும் பொருட்கள் உக்காத பொருட்கள் சூழல் மாசடைவு சூழல் தாக்கம் உள்ளிட்ட பல தெளிவுகளை உள்ளூராட்சி திணைக்களத்தின் சுற்றாடல் உத்தியோகத்தர் என்.எப்.எம்.ராபி தெளிவு படுத்தினார் .

சேதனப் பசளை தயாரிப்பு தொடர்பான விளக்கவுரையை விவசாய உத்தியோகத்தர் எம்.எப்.எம்.ஏ.றிப்கி தெளிவுபடுத்தியதுடன் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் அரச திணைக்களங்கள் வங்கிகள் சனசமூக நிலையங்களுக்கான கழிவுத் தொட்டிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

  இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதல் அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ்,கௌரவ அதிதியாக உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம்,உட்பட கிண்ணியா பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத்  ,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், வங்கி முகாமையாளர்கள் கிண்ணியா உலமா சபை தலைவர் ஹிதாயத்துள்ளா நளீமி பாடசாலை அதிபர்கள்,சுகாதார திணைக்கள சுகாதார பரிசோதகர்கள்,வைத்திய அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டனர்

Web Design by The Design Lanka