கவிக்கோ அப்துற்றஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! - Sri Lanka Muslim

கவிக்கோ அப்துற்றஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

Contributors

-சென்னை-

கவிக்கோ அப்துற்றஹ்மான் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழின் பிரபலமான கவிஞர் கவிக்கோ அப்துற்றஹ்மான்.  இவர், பால்வீதி, சுட்டுவிரல், உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன் என பல கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

 

தமிழில் ஹைகூவையும் கஜலையும் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே உண்டு. கவியரங்க மேடைகளிலும் தனி ஆளுமை செலுத்திவந்தவர் அப்துல்ரகுமான். வாணியம்பாடி கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிக்கோ அப்துல்ரகுமான், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக சென்னை நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்து வமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். எனினும் விரைவில் குணமடைந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கவிக்கோ அப்துற்றஹ்மான் மூன்று வாரங்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.(in)

Web Design by Srilanka Muslims Web Team