கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் நூல் வெளியீட்டுவிழா!! » Sri Lanka Muslim

கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் நூல் வெளியீட்டுவிழா!!

boo

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(அய்ஷத்)


கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களது வலைக்குள் மலர்ந்த வனப்பு எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 19-08-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது..

பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் ALM.அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்விக்கு பேராசிரியர் செ.யோகராசா தலைமை வகிக்கவுள்ளார்.

கெளரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் MS.உதுமாலெவ்வை அவர்களும், SLMC முன்னாள் செயலாளர் நாயகம் MT.ஹஷன் அலி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், மூத்த கவிஞர் மு.சடாட்சரன், பெருவெளி ஏ.அப்துல் றசாக்  ஆகியோர் நூலின் மீதான உரையை நிகழ்த்துவர்.

மேலும் நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சிறப்புரை வழங்கவுள்ளார் பிரபல திரு விக்டர் ஐவன் அவர்கள் என்பதும் குறிப்பித்தக்கது..

இந்நிகழ்வில் தாங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் பாலமுனை சமுக சேவை ஆய்வு சபையின், கலாச்சார பிரிவினர்.

boo FB_IMG_1502973979947

Web Design by The Design Lanka