கவிஞர் மதியன்பனின் 'ஆனாலும் திமிருதான் அவளுக்கு ' கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா

Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான  கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் பன்னூலாசிரியர், கலாபூசணம் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் தலைமையில் இடம்பெறும்.

 

இதில் பிரதம அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,       பீகாஸ் கெம்பஸின் (கல்லூரியின்) முகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இங்கு விஷேட உரையை கவிமாமணி, விஸ்வபிரம்ம ஸ்ரீ சீ.வை.எஸ். காந்தன் குருக்கள் நிகழ்த்தவுள்ளதோடு நூல் நயவுரையை கவிமணி,மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்துவார்.

 

இதில் நூலாளர் அறிமுகத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் சாஹித்யசூரி ரீ.எல்.ஜவ்பர்கான் நிகழ்த்துவார்.

 

02

 

03

Web Design by The Design Lanka