கவிஞர் மருதமுனை ஜமீலின் “அவன் பையில் ஒழுகும் நதி” கவிதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim

கவிஞர் மருதமுனை ஜமீலின் “அவன் பையில் ஒழுகும் நதி” கவிதை நூல் வெளியீடு

3-PMMA CADER-23-07-2017

Contributors
author image

முனவ்வர் காதர்

மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான ‘அவன் பையில் ஒழுகும் நதி’நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் புயல் காவியம் தந்த மர்ஹூம் மஜீத் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் தலைமையுரையாற்றினார்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணியும் நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எம்.அப்துல் லத்தீப் நூலின் முதன்மைப் பிரதியை வர்த்தகர் எம்.எச்.எம்.தாஜூதீனுக்கு வழங்கினார்.விஷேட அதிதி பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், இலக்கிய அதிதி எழுத்தாளர் உமாவரதராஜன் ஆகியோர் விஷேட பிரதிகளை ஹம்ஸா மஜீட்,டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி ஆகியோருக்கு வழங்கினார்கள் அதிக அளவிலான எழுத்தாளர்களும்,கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

2-PMMA CADER-23-07-2017 3-PMMA CADER-23-07-2017 4-PMMA CADER-23-07-2017 5-PMMA CADER-23-08-2017

Web Design by The Design Lanka