கவிஞர் மூதூர் எம்.ஏ.அனஸ் எழுதிய புத்தகம் வெளியீடு » Sri Lanka Muslim

கவிஞர் மூதூர் எம்.ஏ.அனஸ் எழுதிய புத்தகம் வெளியீடு

b99

Contributors
author image

ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்

கவிஞர் மூதூர் எம்.ஏ.அனஸ் எழுதி வெளியிட்ட மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தங்கத்துரைக் காவியம் நூல்வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் மண்டபத்தில் அதிபர் சே.பத்மசீலன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கவிஞர் அனஸின் இருபதாவது வெளியீடான தங்கத்துரைக் காவியம் நூலானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மண்டபம் நிறைந்த தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை தமிழ் சங்கம், அமரர் தங்கத்துரையின் குடும்பத்தினர்,திருகோணமலை கல்வியலாளர்கள் இணைந்து கவிஞர் அனசுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பாராட்டினர். கவிஞர் அனஸ் ஏற்கனவே பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளார்

1..அமைதிப்புக்கள்கவிதை 2,உமர்நெய்னார் புலவர் கவிதை தொகுப்பு, 3.உமர்நெய்னா புலவரன் சீறாப்புரான உரை(மறுபதிப்பு),4.கவிஞர் எஸ்எல்எம்முஹைதீன்கவிதைகள்(தொகுப்பு) 5.நாயகக்காவியம்(கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றது,6.ஊர்துறந்த காவியம்,7.அன்பின் மகனுக்கு(கடிதங்களின் தொகுப்பு).

8.அதிமேதகு ஜனாதிபதிக்கு ஒரு மடல்,9.மனிதம்(கவிதை).10.இஸ்லாமியக்குரல், 11.அஸ்ரப் அமரகாவியம்,12.வாப்புமரைக்கார் வழிக்காவியம்,13.வசந்தம்(கவிதை) 14.மழலைக்கீதம(சிறுவர் பாடல்); 15.கவிஞர் மூதூர் எஸ்எல்.எம். முஹைதீன் கவிதைகளில் தலைமைத்துவத் தகைமை 16.மூதூர் மீனவர் உயர்ச்சி நாட்டம் 17.யதார்த்தம்(கவிதை) 18.எந்தன் ஊரே(கவிதை)19.நண்பனை நவிலும் நா(கவிதை)

b-jpg2 b-jpg2-jpg3

Web Design by The Design Lanka