கவிஞர்.றாஜகவி றாஹிலின் 03 புத்தகங்களின் வெளியீடு » Sri Lanka Muslim

கவிஞர்.றாஜகவி றாஹிலின் 03 புத்தகங்களின் வெளியீடு

boo66

Contributors
author image

A.L.A. Rafeek Firthous

-முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி பிரதம அதிதி-


பிரபல கவிஞரும், எழுத்தாளருமான றாஜகவி றாஹிலின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், ஆர்.கே.மீடியாவின் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நிந்தவூர் பிரதேச சபை உள்ளக அரங்கில் நேற்று இடம் பெற்றது.

கவிஞரும், பொறியியலாளருமான ரீ.இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ. லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கவிஞர் பேராசிரியர் துரைமனோகரன், எழுத்தாளர் அமைச்சுக்களின் செயலாளர் சதீஸ்குமார் சிவலிங்கம், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், வர்த்தக முகாமையாளர் எஸ்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

‘மிட்டாய் மலையை இழுத்துச் செல்லும் எறும்பு(நாவல்), யாழ் மீட்டிய கண்கள்(பயண அனுபவக் கட்டுரை), தேவதையின் அந்தப் புரத்தில் பட்டாம் பூச்சிக் குடியிருப்பு(கவிதை வண்ண நூல்)’ போன்ற மூன்று நூல்கள் இந்நிகழ்வில் வெளியீடு செய்து வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற ஆர்.கே.மீடியாவின் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள் கௌரவிப்பில் றாஜகவி றாகிலின் தாயார் அவ்வா உம்மா, றாஜகவி றாகில், கலைஞர் எம்.ரி.ஹசன் அலி, பேராசிரியர் துரைமனோகரன், எழுத்தாளர் அமைச்சுக்களின் செயலாளர் சதீஸ்குமார் சிவலிங்கம், பேராசிரியர் அஷ்றப், கவிஞர் காத்தான்குடி பௌஸ் மௌலவி, பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம், வர்த்தக முகாமையாளர் எஸ்.றபீக், அறிவிப்பாளர் எஸ்.ஸியாஉல் ஹக் போன்றோர் பொன்னாடை போற்றி, நிiனைவுச் சின்னங்கள் வழங்கி கௌரரவிக்கப்பட்டனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘வெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள், மதஅடையாளங்களை வைத்துக் கொண்டு, இன்று எமது சமூதாயம் பிரிந்து நின்று தேவையில்லாத விடயங்களுக்காகச் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரம் எமது அடிப்படை உரிமைகள், எங்களுடைய தனித்துவ அடையாளங்கள், இருப்புக்கள், சுயநிர்ணய உரிமைகள், தேசிய அடையாளங்கள் எல்லாமே பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இவைகளை வெற்றி கொள்ள வேண்டுமானால் நமது தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். சடங்குகளுக்கும், சம்பபிரதாயங்களுக்கும், மத அடையாளங்களுக்கு மிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததனால்தான் இன்று தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நிற்கின்றனர். இந்த நிலையை பெரும்பாண்மைச் சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செல்கிறது. எனவே இந்நிலையை மாற்றாத வரையில், தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தாதவரையில் இந்த நாட்டில் இரு சமூகங்களும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே தமிழ் முஸ்லிம் உறவு கட்டி வளர்க்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்’ எனத் தெரிவித்தார்.

boo boo-jpg2 boo-jpg2-jpg3 boo-jpg2-jpg3-jpg4 boo-jpg2-jpg3-jpg4-jpg6 boo-jpg2-jpg3-jpg4-jpg66 boo66

Web Design by The Design Lanka