கவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பில் இலக்கிய சந்திப்பு » Sri Lanka Muslim

கவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பில் இலக்கிய சந்திப்பு

vi666

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

தமிழ் நாடு சிங்கப்பூர், துபாய் நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள இலக்கியவாதிகள் எழுத்தாளா்கள் நேற்று(10)இரவு புரவலா் புத்தகப் புங்கா புரவலா் ஹாசீம் உமா் இல்லத்தில் இலக்கிய சந்திப்பொன்றை நடாத்தினாா்கள். இதன்போது காலம் சென்ற கண்ணதாசனின் புதல்வி கவிதாயினி விஷாலி கண்ணதாசன் கொழும்பு வந்திருந்தாா்.

கவிதாயினி உரையாற்றுகையில் – இந்தியாவை விட இலங்கை மற்றம் ஏனைய நாடுகளிலேயே எனது தந்தை கண்ணதாசனின் வரிகளையும் அவரைப் பற்றியும் நிறைய அறிந்து வைத்து அவரின் கவிதைகளிலும் நல்ல பற்று வைத்துள்ளீா்கள். இலங்கையில் வாழும் தமிழை வளா்க்கின்றீா்கள். நானும் மறைந்த தமிழ் நாடு முதலமைச்சா் அம்மா ஜெயலிதா அ.தி.மு.கட்சியில் அங்கத்துவம் தந்து என்னையும் அவரது அரசியல் மேடை ஏற்றினாா். அவா் ஆசிா்வாதம் தனக்கு உண்டு. எதிா்காலத்தில் நானும் அரசியலில் குதிப்பதாக தெரிவித்தாா். அதன் முதல் வரவேற்பை கொழும்பில் நீங்கள் தந்துவிட்டீா்கள். நன்றி எனக் கூறினாா்.

இச் சந்திப்பின்போது புரவலா் புத்தக பூங்கா சாா்பில் புரவலா் ஹாசீம் உமா் திருமதி ஹாசீம் உமரினால் கௌரவிப்பு நடைபெற்றது. இவருடன் வந்திருந்த ஏனைய எழுத்தாளா்களுக்கும், ஞாயிறு தினக்குரல் ஆசிரியா் இளைய பாரதி, நவமணி ஆசிரியா் என்.எம். அமீன், கலைச்செல்வன், தினகரன் ஆலலோசகா் எம்.ஏ.எம் நிலாம், ருபாவாஹினி தொலைக்காட்சி யு. யாக்கூப் தமிழ் மிரா் ஆசிரியா் மதன், மற்றும் பலரும் பொன்னாடை போற்றி சகல எழுத்தாளா்களையும் கௌரவித்தனா். அத்துடன் பௌமியும் நிஜம் சஞ்சிகையும் முதற்பிரதியை புரவலா் பெற்று துபாய் நாட்டினைச் சோ்ந்த டொக்டா் பஜரீவிடம் கையளிக்கப்பட்டது.

vi vi-jpg2 vi-jpg2-jpg3 vi-jpg2-jpg5 vi-jpg2-jpg5-jpg6 vi-jpg2-jpg5-jpg6-jpg7 vi-jpg2-jpg5-jpg6-jpg7-jpg66 vi-jpg2-jpg5-jpg6-jpg66 vi-jpg2-jpg5-jpg9 vi-jpg2-jpg5-jpg77

Web Design by The Design Lanka