கவிநுட்ப துளிப்பா" (ஹைக்கூ கவிதை தொகுப்பு) வெளியீட்டு நிகழ்வு » Sri Lanka Muslim

கவிநுட்ப துளிப்பா” (ஹைக்கூ கவிதை தொகுப்பு) வெளியீட்டு நிகழ்வு

bo

Contributors
author image

Junaid M. Fahath

ஓட்டமாவடி கவிமணி கவிநுட்பம் பாயிஸா நெளபல் அவர்கள் எழுதிய ” கவிநுட்ப துளிப்பா”(ஹைக்கூ கவிதை தொகுப்பு ) வெளியீட்டு நிகழ்வு கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 09.12.2017 சனிக்கிழமை ஓட்டமாவடி அந் நூர் இஸ்லாமிய கல்வி நிலையத்தில் இடம்பெற்றது..

இந் நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி செ.யோகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் நூலின் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் நூல் விமர்சன உரையினை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி(மஜீதி)M.A அவர்கள் வழங்கியதுடன் கவிஞர் ஜனாப் எச்.எம்.எம்.இஸ்மாயில் (SLPS) அவர்கள் நூலுக்கான நயவுரை வழங்கினார்.

மேலும் இவ் கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

bo bo.jpg2

Web Design by The Design Lanka