காசல்ரீ நீர்தேக்க வனப்பகுதியில் தீ விபத்து - Sri Lanka Muslim

காசல்ரீ நீர்தேக்க வனப்பகுதியில் தீ விபத்து

Contributors

காசல்ரீ நீர்தேக்க அதி உச்சப்பாதுகாப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 02 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காசல்ரீ நீர்தேக்கத்திற்ருகிலுள்ள காசல்ரி தொழிற்பயிற்சி நிலைய பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரம் மானாபுல் காட்டுப்பகுதியியே இன்று (04) மதியம் 01 மணியளவில் தீ பற்றியது.

தீ பரவலையடுத்து நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் மின்சாரசபை ஊழியர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் அதிகளவான கருப்பன் தேயிலை மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

-மலையக நிருபர் இராமச்சந்திரன்-

Web Design by Srilanka Muslims Web Team