காசு உள்ளோர் காரியங்கள்..! » Sri Lanka Muslim

காசு உள்ளோர் காரியங்கள்..!

money (1)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


மெய்ன் ரோட்டில் கடை வாங்கு
பெயிண்ட் மாற்றி பிட்டிங் அடி
கை நிறைய கீ மணிக்கு
கடை கொடு வாடகைக்கு

இருக்கின்ற வீடு உடை
இரண்டு மாடி வீடு கட்டு
விரிக்கின்ற கேட் நீக்கி
சுருள்கின்ற கேட் போடு

பாலமுனையில் காணி வாங்கு
பச்சை மரம் நாட்டி வை
ஏழை குடும்பம் தேடிப்பிடித்து
இருப்பாட்டு மரம் பார்க்க

லேட்டஸ்ட் ஐபோண் X வாங்கு
மோட்டர் பைக்கின் மொடல் மாற்று
ஓட்டாமல் நிறுத்தி வைக்க
ஓட்டோ கியர் கார் வாங்கு

உம்றாக்கு தொடர்ந்து செல்
உளுக்குக்கும் அப்பல்லோ செல்
பொம்புளையின் அபாயா விலையை
போட்டி போட்டு கூட்டி வாங்கு

மக்காவில் நகை வாங்கு
மலேஷியாக்கு ட்ரிப் போ
இக்கால லேட்டஸ்ட் பெஷனில்
இருக்கின்ற தோடு மாற்று

பேத்தியின் மகளுக்கும்
பேங்கில் சேவிங் எகவுண்ட் திற
போர்த்திப் படுக்கும் பெட்ஷீட்டும்
பொறின் இன்றேல் வாங்காதே

பேஷ் புக்கில் தேடிப் பார்த்து
பெரிய இடத்தில் சம்பந்தம் வை
காசக் கொட்டி செலவளித்து
கல்யாணம் முடித்து வை

இலக்‌ஷனுக்கு செலவளி
இரட்டிப்பாய் மீண்டும் பெறு
கலக்‌ஷன் வரும் பள்ளிக்கும்
கதைத்துப் பேசி காசு கொடு

இடைக்கிடை நல்ல விசயம்
ஏதோ பார்த்து தருமம் செய்
கொடுக்கின்ற தருமம் மட்டும்
குறிப்பெழுதி கணக்குப் பார்

இதுவெல்லாம் தப்பு என்று
இங்கு இதை சொல்லவில்லை
பொதுவாக ஊரிலுள்ள
புழக்கத்தை எழுதினேன்.

கோடியில் புரண்டவரும்
குடிசையில் இருந்தவரும்
மூடி மண் போட்ட பின்னால்
கூட வரும் செய்த அமலே.

Web Design by The Design Lanka