காடழிப்பு தொடர்பில் வன பரிபாலனத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை - Sri Lanka Muslim

காடழிப்பு தொடர்பில் வன பரிபாலனத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை

Contributors

இந்நாட்டில் காடழிப்பு மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் வௌியான பல்வேறு செய்திகள் தொடர்பில் விளக்கமளித்து வன பரிபாலனத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதில் காடழிப்பு மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ள 09 சம்பவங்கள் தொடர்பில் தனித்தனியாக தௌிவுப்படுத்தி குறித்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

சிங்கராஜா வனப்பகுதியில் ஹோட்டல் கட்டுமானம்

ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாக ஊடகங்களால் சுட்டிக்காட்டப்படும் இடம் சிங்கராஜா தேசிய பாரம்பரிய தளத்தில் இருந்து 3.5 கிலோ மீற்றர் தூரத்திலும் சிங்கராஜா உலக பாரம்பரிய தளத்தில் இருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேல் எலஹெர திட்டத்திற்கான காடழிப்பு
ஹனிதும் கந்த காடழிப்பு
கேகாலை கித்துல்கல தோதலுவ சுற்றுச்சூழல் அழிப்பு
கந்தளை சுன்னகாடு சட்டவிரோத காடழிப்பு
அம்பாறை மாவட்ட மஹஒய பகுதியில் உள்ள கல்வலயாய முன்மொழியப்பட்ட பாதுகாப்பு வனத்தின் ஒரு பகுதியை மகாவலி அதிகார சபையினால் பயிர்ச் செய்கைக்காக முதலீட்டாளர்களுக்கு வழங்கியமை
அம்பகந்தவில வனப்பகுதியில் கடொலான சதுப்புநிலங்களை வெட்டி இறால் பண்ணை அமைக்க வீதி அமைத்தல்
சிங்கராஜா வனப்பகுதியின் இடைவௌிகள் குறித்த அறிக்கை
முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் புபுது ஜாகொடவி 2021.04.05 தினத்தன்று வௌியிட்ட அறிக்கை ஆகியவை தொடர்பிலும் குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team