காடுகளை அழிக்காதீர் எனக்கூறிய பதாதையை அகற்றிய அதிகாரிகள் - Sri Lanka Muslim

காடுகளை அழிக்காதீர் எனக்கூறிய பதாதையை அகற்றிய அதிகாரிகள்

Contributors

காடுகள் அழிப்பிற்கு எதிராக கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய பதாதையை அதிகாரிகள் இன்று அகற்றியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகே, தாமரைத்தடாக மண்டபத்திற்கு முன்பாக இந்த பதாதை அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 70 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டிருந்த இந்தப் பதாதைக்கு முன்பாக இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் ஒன்றையும் செய்வதற்கு சூலலியலாளர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில்தான் கொழும்பு மாநகர சபை மற்றும் பொலிஸார் இணைந்து பதாதையை அப்புறப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team