காணாமல்போன கல்முனை மீனவர்களின் இரண்டாவது படகும் மீட்பு! » Sri Lanka Muslim

காணாமல்போன கல்முனை மீனவர்களின் இரண்டாவது படகும் மீட்பு!

fish

Contributors
author image

M.Y.அமீர்

ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீன்பிடிப் படகுகளில் ஒன்று மாலைதீவுக் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த அடுத்த நான்கு கல்முனை மீனவர்களும் பயணம் செய்த படகு மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் மாலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாலைதீவு உள்த்துறை அமைச்சரும் ஜெமீலின் நெருங்கிய நண்பருமான அஸ்லீன் அகமட் தன்னிடம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிராத்தித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்களில் மூவர் தேகாரோக்கிய நிலையில் உள்ளதாகவும் ஒருவர் சற்று சோர்வுற்றுள்ளதாகவும் மேலும் தெரிவித்ததாக . கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka