காணாமல் போன சிறுமி பமாரா கேஷனி மீட்பு (படங்கள்) - Sri Lanka Muslim

காணாமல் போன சிறுமி பமாரா கேஷனி மீட்பு (படங்கள்)

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

குருணாகல் நிக்கதளுபொத்த பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந் நிலையில் காணாமல் போன (கடத்தப்பட்டதாக நம்பப்படும்) கூறப்படும் நான்கு வயது சிறுமியான பமாரா கேஷனி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவரும் அவரது மகனும் இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுளனர்.

 

இதேவேளை, இந்தச் சிறுமி நெரியாவ பிரதேச வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

அத்துடன் இந்தச் சிறுமியின் பெற்றோர் தங்களது பிள்ளையை அடையாளம் கண்டு கொண்டதனையடுத்து அவரை மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த 8 ஆம் திகதி தனது பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் பமாரா கேஷனி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார். இந்தச் சிறுமி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பொலிஸ் திணைக்களம் பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

 

படங்கள்: நன்றி கொஸிப் லங்கா

abduct1

 

abduct1.jpg2

 

abduct1.jpg2.jpg3

 

abduct1.jpg2.jpg3.jpg4

Web Design by Srilanka Muslims Web Team