காணி, பொலிஸ் மத்திய அரசிடமே இருக்கவேண்டும்: 9 மாகாண ஆளுநர்கள் - Sri Lanka Muslim

காணி, பொலிஸ் மத்திய அரசிடமே இருக்கவேண்டும்: 9 மாகாண ஆளுநர்கள்

Contributors

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பூரணமாக மத்திய அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டுமெனும் நிலைப்பாட்டை ஒன்பது மாகாண சபைகளினதும் ஆளுநர்களும் எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

சகல ஆளுநர்களும் இது பற்றி ஏற்கெனவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர், எனவே இதனையிட்டு மீண்டும் உடவளவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பேச வேண்டிய தேவையிருக்கவில்லையென தென் மாகாண சபை ஆளுநர் குமாரி பாலசூரிய தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை இயன்றளவுக்கு மத்திய அரசாங்கத்தில் தங்கியிராமல்இ நிர்வாகத்திலும் அபிவிருத்தியிலும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டதென அவர் கூறினார்.

மாகாண சபைகளுக்கு வெளிநாட்டு முதலீட்டை கொண்டுவர அதிகாரம் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

தேசிய கல்வியில் கல்லூரிகளுக்கு பயிலுநர்களை தெரிவு செய்வதில் மாவட்ட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்க வேண்டுமென அமைச்சை கேட்பதெனவும் ஆளுநர்கள் தீர்மானித்ததாக குமாரி பாலசூரிய கூறினார்.

தன்னிடம் ஏராளமான அதிகாரங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை ஆளுநர் கூறினார்.tm

Web Design by Srilanka Muslims Web Team