காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியரை கொலை செய்ய முயற்சி.... - Sri Lanka Muslim

காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியரை கொலை செய்ய முயற்சி….

Contributors

காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியயை கெப் வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர்

கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவயில் மாவட்ட நீதவான் மாலிந்த ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் இந்த உத்தரலை பிறப்பித்துள்ளார்.


சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பதவிய பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் முறைப்பாட்டாளர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்காமல் இருக்குமாறும் விதிமுறைகளை மீறி செயற்பட்டால் வழங்கப்பட்டுள்ள பிணையை இடைநிறுத்தி விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதவான் எச்சரித்துள்ளார்.சந்தேகநபர் பதவிய பீ யாய இல 285 முகவரியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.சந்தேகநபர் கெப் வாகனத்தில் கூலிக்கு சாரதியாக தொழில்செய்பவர். இந்நிலையில் ஆசிரியை பாடசாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் ஆசிரியை அவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மனவிரக்தியடைந்த சாரதி அவரை பின்தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளார். இறுதியில் கெப் வண்டியால் மோதி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.இதனையடுத்து பொலிஸ்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுகமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் ஒரு கிலோமீற்றர் தூரம் ஆசிரியை செலுத்திய மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று திட்டமிட்டே இதனை செய்துள்ளதாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர். திட்டமிட்டு கொலையை செய்வதற்கு எத்தனித்துள்ளதுடன் சிறிய மற்றும் பெரிய காயங்களை ஏற்படுத்தியமை, சாட்சியை மறைத்தமை, வைத்தியசாலையில் அனுமதிக்காமை மற்றும் கவனயீனமற்ற விதத்தில் வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேக நபர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team