காதல் திருமணம் செய்த மகளை நண்பருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற தந்தை - Sri Lanka Muslim

காதல் திருமணம் செய்த மகளை நண்பருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற தந்தை

Contributors

காதல் திருமணம் செய்த தனது மகளை நண்பருடன் சேர்ந்து தந்தை கற்பழித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உத்தர பிரதேசத்தில் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது காதலனுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஊரைவிட்டு ஓடிவிட்டார்.

அவர்கள் இருவரும் மும்பையில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே மும்பைக்கு விரைந்த பெண்ணின் தந்தை, மகளை வீட்டிற்கு திரும்பி வரும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அப்பெண் வரமறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது நண்பருடன் சேர்ந்து மகளை அருகில் உள்ள காட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team