காதிக் கோட்டில் காதில் விழுந்தவை » Sri Lanka Muslim

காதிக் கோட்டில் காதில் விழுந்தவை

courts

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


படிச்சிருக்கான்னு பார்த்தாக
பிடிச்சிருக்கான்னு கேட்கலயே

சொத்து இருந்து என்ன செய்ய
‘சத்து’ இல்லா வாழ்க்கையில

வணக்க சாலி எண்டாக
கணக்கில் உலோபியாய் இருக்கானுங்க

உம்மா சொன்ன சொல்லக் கேட்டு
சும்மா போட்டு அடிக்கானுங்க

பேக் ஐடியில நான் இருந்தேன்
போக்கிரி எனக்கே ………….

சம்பாதிக்க போறாரில்ல
சம்பலும் சோறும் வெறுத்துப் போச்சு

சின்ன வீடு வெச்சிருக்கார்
என்னை வெளி நாடு போகட்டாம்

தோலப் பார்த்துப் பேசினாக
வேல செய்வாளாண்ணு பார்க்கலயே

பேயடிச்சாலும் வாழலாம்
வாயடிக்காள் வாழ ஏலா

எண்ட ஊட்டு ஆட்கள் வந்தா
சண்ட பிடிக்காள் சமைக்காம

பத்து மணிக்கு எழும்புறா
சுத்தமின்றி சுத்துறா

கதைச்சாலும் சந்தேகம்
குதிச்சாலும் சந்தேகம்

முகத்தில பாயுறா
நகத்தால பறாண்டுறா

—–
இப்படிக் காரணங்கள்
இலட்சங்கள் இருக்கின்றன.
அப்படி ஏதுமின்றி
அழகாக வாழுகின்ற
குடும்பங்கள் இறைவனை
கோடி தரம் புகழுங்கள்.

தங்கமான வாழ்க்கையில்
அங்க இங்க சிறு குறைகள்
இடைக்கிடை வரலாம்.
கிடைத்திருக்கும் வாழ்க்கையை
போட்டு உடைக்க வேண்டாம்
பொறுமை காத்திருப்பீர்.

Web Design by The Design Lanka