காத்தாங்குடி பொது நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு - Sri Lanka Muslim

காத்தாங்குடி பொது நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு-காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் 2013 தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொது நூலக கேட்போர் கூடத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் 150,000.00 ஒரு லட்சத்து ஐம்பது நாயிரம் ரூபாய் மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் காத்தான்குடி பொது நூலகத்திற்க்கு நகர சபைத் தவிசாளர் ,செயலாளர் ஆகியோர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இங்கு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மற்றும்    மீரா பாலிகா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலை மாணவிகளின் விவாத அரங்கும்,வாசகர் அங்கத்தவர் கௌரவிப்பு,பரிசளிப்பு என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,நகர சபைத் தவிசாளர் அஸ்பர்,நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், ஸ்ரீ.ல.மு.கா நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா,நகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ்,சிரேஷ்ட ஊடகவியலாளரும்,காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளருமான மௌலவி முஸ்தபா (பலாஹி),ஆசிரியர் ஜூனைட் , காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாரக், காத்தான்குடி பொது நூலக உத்தியோகத்தர்கள், உட்பட பாடசாலை மாணவிகள் ,ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Web Design by Srilanka Muslims Web Team