காத்தான்குடியில் ஒரு பேக்கரி இரு ஹோட்டல்களுக்கு சீல்! - Sri Lanka Muslim

காத்தான்குடியில் ஒரு பேக்கரி இரு ஹோட்டல்களுக்கு சீல்!

Contributors

60 இற்கு மேலாக எமது உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கப்பட்டு, காத்தான்குடி நகரில் காணப்பட்ட 69 உணவு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது ஒரு பிரசித்த பேக்கரியும் இரு ஹோட்டல்களும் மூடப்பட்டு, ஒரு வாரத்திற்குள் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது என மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.சுகுணன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“41 இடங்களிலிருந்தும் 73 வகையான உண்பதற்கு ஏற்றதல்லாத பாரிய அளவு உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 23 வகையான பொருட்கள் இன்றே எரித்து அழிக்கப்பட்டதுடன் ஏனையவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கும் அனுப்பப்பட்டது.

பல பிரசித்திபெற்ற கடைகளுக்குள்ளும் பாரிய குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றை இரு வாரங்களுக்குள் திருத்தி எமக்கு அறிவிக்கும்படியும் கேட்கப்பட்டது.

இன்றைய நிகழ்வின்போது வழக்கு தாக்கல் செய்திருந்தால் காத்தான்குடி வர்த்தகர்களுக்கு எதிராக இன்றுமட்டும் 100 வழக்குகளுக்கு மேல் தாக்கல் செய்து 50 இலட்சத்திற்கு மேல் தண்டப்பணம் அடித்திருக்க முடியும். அப்படி செய்தால் பிற்காலத்தில் பொதுமக்களிடம் இருந்துதான் அதுவும் கறக்கப்பட்டிருக்கும். ஆனால், அடுத்த தடவை பேச்சுக்கு இடமில்லை எனக்கூறியே அவர்களை திருந்தும்படி அனுப்பி வைத்தோம்.

இன்று ஆதரவு தந்த நகரசபை தவிசாளர் அஸ்பர் அத்துடன் பொலிசார், மீடியா அனைவருக்கும் நன்றி”  என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team