காத்தான்குடி பள்ளிவாயல் உள்ளிட்ட இரு இடங்களில் கொள்ளை - Sri Lanka Muslim

காத்தான்குடி பள்ளிவாயல் உள்ளிட்ட இரு இடங்களில் கொள்ளை

Contributors

காத்தான்குடியில் இன்று (27) அதிகாலை பல சரக்கு கடை ஒன்றில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிட நிதிக்கான உண்டியல் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள எம்.கலீல் என்பவருக்கு சொந்தமான பல சரக்கு கடையொன்று இன்று அதிகாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை காத்தான்குடி 6ஆம் குறிச்சி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலுள்ள ஸெயின் மௌலானா பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியலொன்றும் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.மாஹீர் தெரிவித்தார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team