காத்தான்குடி -பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 420 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. பஸ் சேவை – - Sri Lanka Muslim

காத்தான்குடி -பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 420 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. பஸ் சேவை –

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

இலங்கை போக்குவரத்து சபையின் மேற்குப் பிராந்தியத்தின் கம்பஹா மாவட்டத்திலுள்ள வெலிசர  டிப்போவும்; ஜா –எல டிப்போவும் இணைந்து காத்தான்குடி -பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பொலனறுவை ஊடாக காத்தான்குடிக்கும் இரவு நேரத்தில் விஷேட பஸ் சேவையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வெலிசர  டிப்போ முகாமையாளர் லக்ஷ்மன் மல்ராஜ் தெரிவித்தார்.

 

இலங்கை போக்குவரத்து சபையின் மேற்குப் பிராந்திய முகாமையாளரின் முயற்சியின் பயனாக இப் பஸ் சேவை செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுவதாகவும் தினமும் கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கும் – காத்தான்குடியில் இருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் -சாதாரண கட்டணமாக 420 ரூபாய் மட்டுமே அறவிடப்படுவதாகவும் மிகவும் குறுகிய நேரத்தில் காத்தான்குடிக்கும் -கொழும்புக்கும் , கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் சென்றடைவதற்கு இப் பஸ் சேவை பெரிதும் உதவுவதாகவும் வெலிசர  டிப்போ முகாமையாளர் லக்ஷ்மன் மல்ராஜ் மேலும் தெரிவித்தார்.

 

இப் பஸ் சேவையில் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் காத்தான்குடியில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்வதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு ,காத்தான்குடி ஆகிய பஸ் தரிப்பு நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளமுடியும் எனவும்  கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு செல்வதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ளமுடியும் அத்தோடு இவ் ஆசன முற்பதிவுக்கு 30 ரூபாய் அறவிடப்படும்.

 

குறித்த பஸ் சேவை தினமும் இரவு  10.00 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 6.00 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை சென்றடைவதாகவும் – கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து இரவு 12.20 மணிக்கு புறப்பட்டு காலை 7.00 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைவதாகவும்  வெலிசர  டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

 

குறித்த பஸ் சேவையில் காத்தான்குடி ,மட்டக்களப்பு,ஏறாவூர்,செங்கலடி ,ஓட்டமாவடி ,வாழைச்சேனை,                          ரிதி தென்னை, புனாணை,வெலிகந்தை ,செவனப்பிட்டிய ,மன்னம்பிட்டிய ,பொலனறுவை,ஹபறனை,தம்புள்ளை,கலேவல ,மெல்சிறிபுர,இப்பாகமுவ,குருநாகல்,பொதுஹர,பொல்கஹவெல, அலவ்வ,வரகாபொல,நிட்டம்புவ,கடவத்தை, கிரிபத்கொடை ,கொழும்பு,ஜா –எல, கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற இடங்களுக்கு செல்லும் பிரயாணிகள் இதில்  பயனிக்க முடியும்.

 

குறிப்பு. காத்தான்குடி -பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 420 ரூபாவும் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பொலனறுவை ஊடாக காத்தான்குடிக்கு 389 ரூபாய் அறவிடப்படும்.

 

bus1

 

bus1.jpg2

 

bus1.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team