காத்தான்குடி மாணவர்களின் சாதனையோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாவட்டத்தில் முதலாமிடம் (video) » Sri Lanka Muslim

காத்தான்குடி மாணவர்களின் சாதனையோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாவட்டத்தில் முதலாமிடம் (video)

ka66

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 (வீடியோ)

2016ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் காத்தான்குடி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற சாதனையுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது மாவட்டத்தில் முதலாம் இடத்தினை அடைவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளதை கெளரவிக்கும் முகமாக அவர்களுக்கு கற்பித்த காத்தான்குடி தனியார் IBMS கல்வி நிறுவனமானது நேற்று 11.01.2017 புதன்கிழமை முக்கியமான ஒன்று கூடல் நிகழ்வினை IBMS கல்லூரியில் அதன் நிருவாக பணிப்பாளர் எச்.எம்.எம்.பாக்கீர் தலைமையில் நடாத்தியது.

அதன் அடிப்படையில் வணிக பிரிவில் காத்தான்குடி கோட்டத்திலிருந்து இருபது மாணவர்களும், ஏறாவூர் கோட்டத்திலிருந்து இருபது மாணவர்களும், ஓட்டமாவடி கோட்டத்திலிருந்து பத்து மாணவர்களுமாக மொத்தமாக ஐம்பது மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட மத்தி கல்வி வலயத்திலிருந்து வணிக முகாமைத்துவ பிரிவிற்கு தெரிவாகியுள்ளனர். இச்சாதனையானது மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஏனைய நான்கு வலயங்களையும் பின் தள்ளி விட்டு முதலாமிடத்தினை பெற்றுக்கொள்ள இலகுவாக அமைந்திருந்தது.

ஆனால் மறு புறத்திலே இவ்வாறான பெறுபேறுகளை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றிருந்தும் அதனை ஊடகங்கள் வெளிக்காட்டவில்லை என மாவட்டத்தில் வர்த்தக பிரிவு மாணவர்கள் மத்தியில் மிக நீண்டகாலமாக மறுமலர்ச்சியினை ஏற்படுத்தி அதிகப்படியான மாணவர்கள் பல்கலை கழகத்திற்கு தெரிவாகுவதற்கு காரணமாய் இருந்து வரும் வணிக கல்வி ஆசிரியர்-கே.கே.அரஸ், பொருளியல் ஆசிரியர்-எச்.எம்.எம்.பாக்கீர், கணக்கியல் ஆசிரியர் சலாம் ஆகியோர் தெரிவிக்கின்றனர். அத்தோடு மாவட்டத்திலிருந்து இம்முறை பல்கலை கழகத்திற்கு எதிர்பார்க்கப்படுகின்ற 110 வணிகப்பிரிவிற்கான மாணவர்களில் 50க்கும் அதிகமான மாணவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து தெரிவாக உள்ளமையானது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஏற்படுத்தியுள்ள பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.

மேலும் இம்முறை காத்தான்குடி கோட்டத்திலிருந்து வணிக பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 63ம் இடத்தினை எஸ்.அப்துர் ரஹ்மான் என்ற மாணவன் பெற்றுள்ளார். அதே போல் காத்தான்குடி கோட்டத்திலிருந்து கலை பிரிவில் பதினொரு மாணவிகள் பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதுவும் மாவட்டத்தில் மேலும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகின்ற அதே நேரத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்வியில் முன்பைவிடவும் அதிக ஈடுபாட்ட்டுடன் செயற்படுவதாக கே.கே.அரஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெறுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்துள்ள காத்தான்குடி கோட்டத்திலிருந்து பல்கலை கழகத்திற்கு தெரிவிகாயுள்ள மாணவர்களுக்கான ஒன்று கூடலில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளின் காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka