காபட் வீதியும் காரைதீவு, கல்முனை தமிழ் இனவாதிகளின் காழ்ப்புணர்ச்சியும்..! - Sri Lanka Muslim

காபட் வீதியும் காரைதீவு, கல்முனை தமிழ் இனவாதிகளின் காழ்ப்புணர்ச்சியும்..!

Contributors

மனிதன் சந்திரனில் 1969ல் காலடி வைத்துவிட்டான். நாங்கள் சுவாமி விபுலானந்தர் காலத்தில் இருந்தவாறு இன்றும் செத்தை வேலையும் அருகே பிரதான வீதியின் அருகில் வெள்ளரிப் பழமும், கத்தரிக்காயும் தட்டியில் வைத்து விற்பனை செய்வதுபோல முஸ்லிம்களும் வாழவேண்டுமென நினைக்கின்றார்களா தமிழ் இனவாதிகள்? அதனால்த்தான் காபட் வீதி போடுவதை தடுக்கின்றார்களா?

நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வயல்கள், காடுகளை ஊடறுத்து அதிவேக பாதைகள் போடப்பட்டுள்ளது, போடப்படுகின்றது. கல்முனை யில் மட்டும் அதை செய்யக்கூடாது என இனவாதிகள் தடுக்க காரணமென்ன?

கல்முனை பஸ்நிலையம் வரை அந்த வீதி அபிவிருத்தி செய்யப்படும்போது தரவைபிள்ளையார் கோயிலுக்கு பின்னால் அடாத்தாக சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருக்கும் சுமார் இரண்டரை ஏக்கர் உப்புக் குழத்தை இழக்க வேண்டும் என்பதேயாகும்.

பிரதான வீதியிலிருந்து 34.0 மீட்டர் மட்டுமே தரவை கோயிலுக்கு உரிய நிலம். சுனாமியின் பின் அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அமைக்க அம்பாரை அரச அதிபர் அவர்களால் அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. அந்த அகதிகளுக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது. வண்ட் பாதை காபட்டாக மாறும்போது உப்புகுழமும் அபிவிருத்தி செய்யப்படும். அப்போது ஆக்கிரமித்த குழத்தை விடுவிக்க வேண்டிவரும் என்பதே காபட் வீதி அமைப்பதை எதிர்க்க பிரதான காரணமாகும்.

MAINTENANCE DIAGRAME OF LOWER KURUNAL KANJI UNIT என தலைப்பிட்ட மாவட்ட நில அளவை காரியாலய வரைபடத்தின்படி – மாவடிப்பள்ளி சம்மாந்துறை வீதியில் இருந்து ஆரம்பித்து கல்முனை பஸ் நிலையத்தை தொடும் வண்ட் வீதியானது – KAPPALAKADDU ANICUT,BAILY BRIDGE,1st CAUSE WAY REG. ஆகியவற்றினூடாக உப்பு வெளி, பொன்னான்கன்னி வெளி, பறயன் வெளி ஆகியவற்றின் கிழக்காலும், உப்புக்குளம்,தாளையடிக் குளம் ஆகியவற்றின் மேற்காலும் செல்கின்றது. இந்த வண்ட் பாதையானது எந்த ஒரு வயலையோ, குளத்தையோ ஊடறுத்து செல்லவில்லை. அந்த பாதை பண்டு தொட்டு மக்களால் பாவிக்கப்படுகின்றது.

இந்த பாதைக்கு காபட் போடுவதை தடுக்கும் அளவுக்கு காரைதீவு தமிழர்களுக்கு இடம் கொடுத்தது கல்முனை மாநகர சபையை 2004 முதல் இன்று வரை ஆட்சி செய்யும் மாநகர முதல்வர்கள்தான்.

1987.05.12 ஆம் திகதிய அரச வர்த்தமானி மூலம் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை உருவாக்கும் பற்றிய பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நாட்டில் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. அதன்படி கல்முனை பிரதேச சபையின் தெற்கு எல்லையாக –

” கடற்கரை நெடுகிலும் மாளிகைக்காட்டு வீதியின் மத்திய கோடு நெடுகிலும், கொழும்பு – மட்டக்களப்பு பெருவீதிக்கு, அங்கிருந்து சொல்லப்பட்ட பெருவழியின் மத்திய கோடு நெடுகிலும் காரைதீவு சந்திக்கும் அங்கிருந்து காரைதீவு – சம்மாந்துறை பெருவழியின் நெடுகிலும் மாவடிப்பள்ளி பள்ளிவாசலுக்கு, அங்கிருந்து வடக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கும்புறுகொட இடத்தில் எல்லை நெடுகிலும் மீண்டும் காரைதீவு – சம்மாந்துறை பெருவழியின் மத்திய கோட்டைக்கு, அங்கிருந்து சொல்லப்பட்ட மத்திய கோடு நெடுகிலும் வேட்டை ஆறுக்கு குறுக்காக உள்ள மதகின் மத்திய புள்ளிக்கு.”
என்று கெசட் செய்யப்பட்டுள்ளது. அந்த எல்லையே 1936.03.27 ஆம் திகதிய வர்த்தமானி இல.8210 லும் கூறப்பட்ட கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமசபைக்கும், 1987 ல் உருவான கல்முனை பிரதேச சபைக்கும், 1998.12.11ல் 1057/16 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட கல்முனை நகர சபைக்கும், 2001.06.11 ல் 1188/1 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லையாகும். நிர்வாக முறைகள் மாறினாலும் எல்லை மாறாமல் இருந்து வந்துள்ளது.

2014.06.28 ஆம் திகதிய 1868/8 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அன்று பாதுகாப்பு, மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த கெளரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களால் “கல்முனை மாநகர சபை பகுதி அபிவிருத்தி திட்டத்திற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டது. அந்த வர்த்தமானியிலும் கல்முனை மாநகரின் வர்ணம் தீட்டப்பட்ட படம் கெசட் செய்யப்பட்டுள்ளது. அதிலும் மேற்குறிப்பிட்ட எல்லையே தெற்கு எல்லையாக காட்டப்பட்டுள்ளது.

இந்த கல்முனையின் தெற்கு எல்லை காரைதீவால் களவாடப்பட்ட போது கல்முனை மாநகர மேயராக இருந்த காவலன் கண்கெட்டுப்போய் இருந்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆளப்பட்ட காரைதீவானது மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு ஆகிய 100% முஸ்லிம் கிராமங்களை உள்வாங்கி காரைதீவு பிரதேச சபையாக 2005.12.01 ல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் வடக்கு எல்லையானது கல்முனை மாநகர சபையின் தெற்கு எல்லையை மாளிகைகாட்டு மத்தியிலிருந்து மேற்கே எல்லை நிர்ணயத்திற்கான பூகோள அமைப்புகளை கவனத்தில் கொள்ளாது தனியார் காணிகள், வயல்காணிகளை ஊடறுத்து வேட்டையாற்றின் ஒருபகுதியை அடைகிறது. அதாவது கல்முனை மாநகரின் நிர்வாகத்துக்குட்பட்ட குடாகரை மேற்கு 300 ஏக்கர், குடாகரை கிழக்கு 300 ஏக்கர் என 600 ஏக்கர் விவசாய காணிகளையும், அபு அப்துல்லா பள்ளியையும், மாவடிப்பள்ளி முதல் கல்முனை பஸ் நிலையம் வரையான தற்போது காபட் போடப்படும் வண்டு வீதியையும் சட்டவிரோதமாக களவாடப்பட்டுள்ளது.

அதாவது 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின்படி நகரசபை, மாநகர சபை நிர்வாகத்துக்குட்பட்ட பகுதி நீங்கலாக பிரதேச சபை உருவாக வேண்டும் என்றுள்ளது. அதற்கு மாற்றமாக காரைதீவு பிரதேச சபை கல்முனை மாநகரின் எல்லையை களவாடியது மட்டுமல்லாமல் காபட் வீதி அமைப்பதையும் தடுக்கின்றது.

இந்த தொடர் பிரச்சினையை தீர்க்க , காரைதீவால் சட்ட விரோதமாக களவாடப்பட்ட பகுதிகளை மீட்க 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தை மதியாது மேற்கொண்ட காரைதீவு பிரதேச சபையின் சட்டவிரோத உருவாக்கத்தை எதிர்த்து மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதே ஒரே வழியாகும்.

இதுவிடயமாக கல்முனை மாநகர மேயரிடம் கல்முனை மறுமலர்ச்சி மன்றம் ஒரு வேண்டுதலை முன் வைத்தது. அதுவும் கானல் நீராகிவட்டது.

கல்முனை உப பிரதேச செயலக சட்ட விரோத கோயிலை கட்டுமட்டும் பார்த்துக்கிருந்துவிட்டு சாட்டுக்கு பிழையான வழக்கு தாக்கல் செய்தது போல் காரைதீவால் காவு கொள்ளப்பட்ட பகுதிகளையும் பார்த்துக்கொண்டு காவலனும், மேயரும் விழிகண் குருடர்கள் போல இருக்கின்றார்கள்.

தேர்தல் ஒன்று வந்தால் தமிழர்களிடமிருந்து கல்முனை யை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று ஒலமிட்டு அழுவார்கள்.

ஹாஜி நஸீர்

Web Design by Srilanka Muslims Web Team