காருண்ய நபிகளின் கருணை உள்ளம்!! » Sri Lanka Muslim

காருண்ய நபிகளின் கருணை உள்ளம்!!

islam6

Contributors
author image

Suaib Cassim

ஏகஇறைத் திருத்தலமாம் கஃபா தன்னை
இபுறாகீம் நபியவர்கள் அமைத் தளித்தார்
ஏகஇறை தன்னை- யங்கே வணங்க வேண்டும்
இணையாக வேறு இறை அங்கே இல்லை.

ஏகனையே வணங்கி வந்த ஆலயத்தில்
இணைவைப்பார் புகுந்து சிலை வைக்கலானார்
வேதனைக்கே உரியஇந்த நிலைமை தன்னை
வேரோடு களைந்தெறிதல் கடமை என்றே.

மாதவராம் எங்கள்நபி முனைந்து நின்றார்
மக்காவுக் கேகிடவே கனிந்து நின்றார்
தோழர்பத் தாயிரம்பேர் இணைந்து சென்றார்
தூயபணி செய்திடவே மக்கா சென்றார்.

வழிதனிலே அபூசுபியான் ஒளிந் திருந்து
வள்ளல்நபிக் கூறுசெய்ய முனைந்த போது
வழிமேலே விழிவைத்த தோழர் கூட்டம்
வாகாகச் சுபியானைக் கைது செய்தார்

சுபியானின் மீதுள்ள குற்றம் அந்தோ
சொற்களிலே அடங்காது அனந்தம் கண்டீர்
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டே
எதிரியாய் இயங்கி வந்தார் நபிகள்மீது

வசைபாடித் துன்புறுத்தி மகிழ்ச்சி கொண்டார்
வள்ளல் – நபிதனைக் கொல்லத் திட்ட மிட்டார்
மதீனா – மேல் போர் தொடுக்க முனைந்து நின்றார்
மக்கத்துக் காபிர்களின் தலைவர் ஆனார்.
இத்தனையும் செய்த அபூ சுபியான் தன்னை
இங்கிதராம் நபிமுன்னே நிறுத்தி னார்கள்
குற்றங்கள் பலபுரிந்த சுபியான் தன்னை
கொலைசெய்யும் தண்டனையே வேண்டும் என்றே

மற்றவர்கள் எண்ணிநின்ற போதும் ஆங்கே
மாநபிகள் அற்புதமாய் நடந்து கொண்டார்
சுபியானைக் கருணையுடன் நோக்கி நின்றார்
சுபியானே ! என்மொழியைக் கேளும் என்றார்
அகிலத்தின் அதிபதியாம் அல்லாஹ் என்னை
அவன்தூதாய் அனுப்பி வைத்தான் மாந்தருக்கு
இறைதூதை எத்திவைத்து இஸ்லாம் தன்னை
இயன்றவரை பரப்பு தென் கடமை காண்பீர்

குற்றம் செய் மாந்தர் தமை கொல்வ தெங்கள்
கொள்கையன்று குற்றத்தை உணர வைத்து
வெற்றிதரும் நேர்வழியில் நிலைப்ப டுத்தி
வாழவைத்தல் நபிவழியாம் என்றுரைத்தார்.

ஆனந்த மேலீட்டால் …அபூ சுபியானும்
அன்புநபி பாதத்தைப் பணிந்து தொட்டார்
மாதவத்து மாநபியே அருட் பிழம்பே
மன்னியுங்கள் என்னை எனக் கெஞ்சிக் கேட்டார்

நான் செய்த குற்றமெலாம் மன்னித் தென்னை
நல்வழிக்குத் திருப்பிவிட்ட நபிகள்கோனே!!
வாழ் நாளில் இனிநானும் உங்கள் தோழன்
அல்லவனைப் புகழ்ந் திஸ்லாம் ஏற்றேன் என்றா

Web Design by The Design Lanka