காரைதீவில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பொலிஸாரால் மீட்பு..! - Sri Lanka Muslim

காரைதீவில் சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பொலிஸாரால் மீட்பு..!

Contributors

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு 12 ஆம் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்கள் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது .

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team