காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு..! » Sri Lanka Muslim

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு..!

Contributors
author image

Editorial Team

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாகவும், ஏனைய திணைக்களங்களுக்கு பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (21) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களும் , நிர்வாக உத்தியோகத்தர் திரு டி.கமலநாதன் அவர்களும், பிரதேச செயலாளர் பிரிவு பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு வே. அரவிந்தன் அவர்களும் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பயிற்சி ஆசிரியர்களாக 32 பட்டதாரி பயிலுனர்களுக்கும், பாடசாலைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 24 பட்டதாரி பயிலுனர்களுக்கும், ஏனைய திணைக்களங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 33 பட்டதாரி பயிலுனர்களுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நூருள் ஹுதா உமர்

Web Design by The Design Lanka