காரைதீவு பிரதேச செயலகத்தில் கை கழுவும் உபகரணங்கள் மற்றும் வெப்பமானிகள் வழங்கி வைப்பு ! - Sri Lanka Muslim

காரைதீவு பிரதேச செயலகத்தில் கை கழுவும் உபகரணங்கள் மற்றும் வெப்பமானிகள் வழங்கி வைப்பு !

Contributors

நூருல் ஹுதா உமர்

சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அவசர உதவி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்பிள்ளைப் பருவ பாடசாலை மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக கை கழுவும் உபகரணங்கள் மற்றும் தனிநபர் தொடுகையற்ற வெப்பமானிகள் என்பன காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 08 முன் பள்ளிபாடசாலைகளுக்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் இன்று (22) வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் பார்த்திபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோகுலராஜன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.ஜெஸ்மீர் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team