காலியில் முஸ்லிம் நபருக்குச் சொந்தமான ஆடையகத்தில் தீ: 03 மாடிகள் ஆடைகளுடன் எரிந்து நாசம் » Sri Lanka Muslim

காலியில் முஸ்லிம் நபருக்குச் சொந்தமான ஆடையகத்தில் தீ: 03 மாடிகள் ஆடைகளுடன் எரிந்து நாசம்

ss

Contributors
author image

Editorial Team

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான பெக்டரி அவுட் லெட் ஆடையகம் தீ பற்றி எரிந்துள்ளது

காலி கழுவெல்லை பிரதேசத்தில் இன்று காலை 9 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

காலி மாநாகரசபையின் தீயனைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குறித்த தீப்பரவலில் ஆடை விற்பனைக் கடை முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும் தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Web Design by The Design Lanka