காலி முகத்திடலில் இருந்த விசாலமான இலங்கைக்கொடி திடீர் மாயம்..! நடந்தது என்ன..? - Sri Lanka Muslim

காலி முகத்திடலில் இருந்த விசாலமான இலங்கைக்கொடி திடீர் மாயம்..! நடந்தது என்ன..?

Contributors
author image

Editorial Team

காலி முகத்திடலில் கட்டப்பட்டு இருந்த இலங்கையின் விசாலமான தேசியக் கொடி இன்று காலை ஏற்றப்பட்டு இருக்கவில்லை.

வருடத்தின் 365 நாட்களும் ஏற்றப்பட்டு இருக்கும் குறித்த கொடி இன்று காலை ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விமானப்படை செய்தித் தொடர்பாளர்,

இன்று காலை வழக்கம் போல் காலி முகத்திடலில் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகவும் ஆனால் மழை காரணமாக சிறிது நேரத்தில் மீண்டும் இறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மழை பெய்யும் போது கொடிக் கம்பம் ஈரமாக இருப்பதால் தேசியக் கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

ஈரமான கம்பபம் காய்ந்த பின் கொடியை மீண்டும் ஏற்றுவது இயல்பான நடைமுறை என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டதாக விமானப்படை கூறியது.

source : ibc tamil

Web Design by Srilanka Muslims Web Team