காலைக் கதிர் பத்திரிகையின் இனவாத செய்திக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் கண்டன அறிக்கை » Sri Lanka Muslim

காலைக் கதிர் பத்திரிகையின் இனவாத செய்திக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் கண்டன அறிக்கை

Kalai kathir 2 - 09.01.2018

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதாக பொய்யான தகவலின் அடிப்படையில் யாழ் வணிகர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களை மேற்கோள்காட்டி காலைக்கதிர் பத்திரிகை இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டிருப்பது யாழ் முஸ்லிம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதோடு இன முரண்பாட்டுச் சிந்தனை தொடர்ந்தும் இம்மண்ணில் தலைத்தோங்குவதற்கு காலைக்கதிர் பத்திரிகை துணைபோகின்றதா என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.

நான்கு யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் போட்டியிடுவதாக தெரிவித்த குறித்த பத்திரிகை அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடத் தயாரா என்பதையும் கேட்க விரும்புகின்றோம். அத்தோடு இன முரண்பாட்டுச் சூழ்நிலையை தோற்றுவிக்கும் இக்கருத்துக்களுக்கு எமது ஆழ்ந்த கண்டனங்களையும் வருத்தங்களையும் தெரிவிப்தோடு இவ்விடயம் குறித்து தேர்த்ல் ஆணைக்குழுவினதும், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினதும், சர்வதேச சமூகத்தவரினதும் கவனத்துக்கு கொண்டு வருவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1990களில் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட யாழ் முஸ்லிம் மக்கள் இன்று மீள்குடியேறி வருகின்றனர். அவர்களுக்கென முன்னர் காணப்பட்ட மூன்று தேர்தல் வட்டாரங்கள் இரண்டு தேர்தல் வட்டாரங்களாக குறைக்கப்பட்டு இரண்டு முஸ்லிம் வட்டாரங்களில் மாத்திரமே களமிறங்கக் கூடிய துர்ப்பாக்கியமான சூழ்நிலையை சகித்துக் கொண்டு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடு நல்லிணக்கமாக செயல்பட முன்வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் வெறுப்புணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்ற இச்செய்தியானது நல்லிணக்கத்துக்கு பாரிய சவாலாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு

ஏ.சீ.எம் மஹானாஸ்  – யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக    

எம்.எஸ் அஸ்லியா பேகம் –   யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக

Web Design by The Design Lanka